» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தூரில் பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள்
சனி 18, ஜனவரி 2025 8:51:27 AM (IST)
குளத்தூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கபடி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் தைத்திருநாள் தமிழர் திருநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் 49-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிங் மேக்கர் நற்பணி மன்றம், நாட்டாமை சரத் குரூப்ஸ் நண்பர்கள் மற்றும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் ஜாலி விளையாட்டு போட்டி மற்றும் சிறுவர்களுக்கான மாபெரும் கபடி போட்டி ஜன.15, 16 ஆகிய இரண்டு தினங்கள் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
இந்து நாடார் உறவின் முறை தலைவர், குளத்தூர் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் தலைமை வகித்தனர். போட்டிகளில் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.