» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி- வெள்ளாரம் அரசு பேருந்து சேவை நீடிப்பு : கிராம மக்கள் மகிழ்ச்சி!

வெள்ளி 20, டிசம்பர் 2024 11:33:43 AM (IST)



கோவில்பட்டியில் இருந்து ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிராமத்திற்கு அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிராமத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் வேலை, கல்வி, நீதிமன்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். எனவே வெள்ளாரம் கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாரம்  கிராமத்தில் கோவில்பட்டி - எம்.வெங்கடாசலபுரம் வரை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளாரம் வரை செல்வதற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்  காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

இசக்கிமுத்துபனையூர்Feb 2, 2026 - 04:25:48 PM | Posted IP 104.2*****

சிறப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory