» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி துவக்க விழா!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 1:18:20 PM (IST)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதி தாண்டவன் தொடங்கி வைத்தார்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி தாண்டவன் தலைமை தாங்கி, புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்கள். புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா, இளநிலை நிர்வாக உதவியாளர்கள் அருள்மணிராஜ், இசக்கியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.