» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்களின் விலை கடும் உயர்வு: அலைமோதிய மக்கள் கூட்டம்!!!

சனி 25, மே 2024 7:52:02 PM (IST)தூத்துக்குடியில் நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாத காரணத்தினால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை வருகிற 27ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது இதன் காரணமாக நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 23ஆம் தேதிக்கு முன்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற படகுகள் இன்று கரை திரும்பின. ஆனால் கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தங்கு கடலுக்கு சென்று விட்டு வந்த நாட்டுப்படகுகளில் குறைவான மீன்களே இருந்ததால் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. 

இன்று சனிக்கிழமை மற்றும் விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ 1500 முதல் 2000 ரூபாய் வரையும், விளைமீன் கிலோ 700 முதல் 750 ரூபாய் வரையும், ஊளி மீன் கிலோ 700 ரூபாய் வரையும், பாறை கிலோ 700 ரூபாய் வரையும், குருவளை கிலோ 350 ரூபாய் வரையும், சாலை ஒரு கூடை நேற்று 5,500 ருபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 6 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. 


மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையிலும் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிவுக்கு வந்த பின்பு நாட்டுப்படகுகள் கடலுக்குச் சென்ற பின்பு இந்த மீன் விலை குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory