» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 1:17:54 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.14) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழா இன்று ஏப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 

பின்னா் மூலஸ்தானம் முன் உள்ள கொடிமரத்தில் காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.காலை 11:00 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று சித்திரை முதல் தேதி என்பதால் காலையிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் காலை-மாலை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளுகின்றனா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி தமிழ்செல்வி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory