» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசளித்த பிரதமர்

வெள்ளி 29, மார்ச் 2024 6:23:59 PM (IST)



இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸுக்கு தூத்துக்குடியில் கடல் பகுதியில் எடுத்த முத்துக்களை பரிசாகப் பிரமதர் மோடி வழங்கினார்.

இந்தியாவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அப்போது, இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பில்கேட்ஸ், பிரதமர்  மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது, காலநிலை மாற்றம் குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து, பிரதமர் இல்லத்திற்கு வந்த பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி முத்து பரிசளிப்பு

அண்மையில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி தூத்துக்குடி வந்தார். அப்போது தூத்துக்குடி அழகர் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் வாங்கப்பட்ட தூத்துக்குடி கடல் பகுதியில் எடுத்த முத்துக்களை கட்சியின் சார்பாக  பரிசாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இந்தியா வந்த‌ மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்சுக்கு பரிசாகப் பிரமதர் மோடி வழங்கினார். இதனைக் கொடுக்கும்போது உள்ளூர் பொருட்களை வாங்குங்கள் என மக்களை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் பெருமை கிட்டும் என்றார். தனக்கு அளிக்கப்பட்ட தூத்துக்குடி முத்துக்களை இன்னொருவருக்கு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பிரதமரின் இந்த செயல் தூத்துக்குடியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory