» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடக்காது : புரட்சிகர இளைஞர் முன்னணியினர்!

வெள்ளி 29, மார்ச் 2024 5:30:38 PM (IST)

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடக்காது. மனு நீதி சட்டமே அரசியலமைப்புச் சட்டமாக்கப்படும் என்று புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதன் நிர்வாகிகள் மாநகர ஒருங்கிணைப்பாளர் சுஜித், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவன், தூத்துக்குடி பகுதி பொறுப்பாளர் உத்தரம், அம்பை பகுதி பொறுப்பாளர் பாண்டியன், வீரவநல்லூர் பகுதி பொறுப்பாளர் பெரியார் பித்தன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக ஆட்சியின் மதவெறி மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மோடியின் மீது பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். அந்த வெறுப்பை பொய் புரட்டுகள் மூலம் திசை திருப்பி மீண்டும் ஆட்சியை பிடித்து விடும் வெறியோடு உள்ளது. 

பாஜக தமிழகத்தில் பாமக மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்த போது எட்டி பார்க்காத மோடி வெள்ள நிவாரணமாக 1 பைசா கூட கொடுக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மோடி, ஓட்டுக்காக மட்டும் ஓடோடி வந்து கொண்டிருக்கிறார்.

தன்னிட்சையாக செயல்படக்கூடிய அமைப்புகளாக தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி போன்றவற்றை ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கருவிகளாக மாற்றியுள்ளனர். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே போலீஸ், ஒரே தேர்தல், ஒரே வரி என எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் குவித்து மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து எல்லாற்றுக்கும் ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையை உருவாக்கியுள்ளது. 

பாஜகவிற்கு எதிராக விமர்சிக்கின்ற போராடுகின்ற சிறிய இயக்கங்களையும், தனி நபர்களையும் ஒடுக்க உபா போன்ற சட்டங்கள் மூலம் பழிவாங்கி வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடக்காது. மனு நீதி சட்டமே அரசியலமைப்புச் சட்டமாக்கப்படும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை புதைத்து விட்டு மதவாத பிற்போக்கு சாம்ராஜ்ஜியமாக மாற்றி மோடி அதன் சக்கரவர்த்தியாக முடிசூட்டுவார். எனவே, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளும் பாஜக வீழ்த்தியே ஆக வேண்டும் என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

Matha veriMar 30, 2024 - 11:27:09 AM | Posted IP 162.1*****

ennayya matha veri matha veri..... hindukkalai neengal kindal adithathaividava??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory