» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஈஸ்டர் பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

வியாழன் 28, மார்ச் 2024 11:16:53 AM (IST)

தாம்பரம்- நாகர்கோவில் இடையே ஈஸ்டர் பண்டிகையையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப் படுகிறது .
    
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "மார்ச் 28ந் தேதி வியாழக்கிழமை இரவு 10:20 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் வண்டி எண் 06053 அதிவிரைவு ரயில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:55 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

மேலும் 29ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 06041 அதிவேக விரைவு ரயில் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 5:20 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 7:10 மணிக்கு நாகர்கோவில்  சென்றடைகிறது. 

மறு மார்க்கத்தில் 30ந் தேதி சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 06042 சிறப்பு அதிவிரைவு ரயில் மாலை 5:45 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

அதுபோல 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 4:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06054 சிறப்பு அதிவிரைவு ரயில் மாலை 5:45 மணிக்கு திருநெல்வேலி  வந்தடைகிறது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் 1ந் தேதி திங்கட்கிழமை  அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்றயும்" என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

KanagasabapathyMar 30, 2024 - 11:18:00 AM | Posted IP 172.7*****

மதுரையிலிருந்து புறப்படும் 16729எண் ரயிலை திருச்சியிலிருந்து புறப்பட ஆவண செய்ய பணிவுடன் வேண்டுகிறோம்

KailashMar 30, 2024 - 12:10:32 AM | Posted IP 172.7*****

But Railway ministry doesn't sanction the even pre existing meter guage trains Chennai Main line Janatha Express and Coimbatore Tuticorin daily fasr passenger to our Port city How can we expect new regular trains even after double line Southern railway considers Tuticorin as freight revenue generating point Before at the time ol Railway minister A. K Moorthy two-three special trains per week are operated to Chennai Now Railway ministry instructs us to go to Kovilpatti to board trains Unless we fight together we don't get any train sevices for our Port city

IyelusamyMar 28, 2024 - 02:27:35 PM | Posted IP 172.7*****

Spl train particular not included in all train apps

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory