» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவிற்கு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி

வியாழன் 30, நவம்பர் 2023 8:15:57 AM (IST)

மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை இருமுடித் திருவிழா நடைபெறுகிறது. எனவே பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி  மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635), சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691) ஆகியவை டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரையும்,  மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638),  செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692) கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102), நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658) ஆகியவை நவம்பர் 30 முதல் ஜனவரி 24 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) டிசம்பர் 1 முதல் ஜனவரி 24 வரையும், செங்கோட்டை - சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) நவம்பர் 30 முதல் ஜனவரி 21 வரையும், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக செல்லும் மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ் (22624) நவம்பர் 30 முதல் ஜனவரி 20 வரையும், மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் (12651) டிசம்பர் 3 முதல் ஜனவரி 23 வரையும், ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மென்ட் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22613), பனாரஸ் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22536) டிசம்பர் 3 முதல் ஜனவரி 21 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 

நாகர்கோவில் - சென்னை எக்ஸ்பிரஸ் (12668), மதுரை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (22102), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20896) ஆகியவை டிசம்பர் 1 முதல் ஜனவரி 19 வரையும், தஞ்சாவூர் மெயின் லைன் வழி சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் (22623) டிசம்பர் 1 முதல் ஜனவரி 21 வரையும், டெல்லி நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி எக்ஸ்பிரஸ் (12652) நவம்பர் 30 முதல் ஜனவரி 23 வரையும், அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22614) நவம்பர் 29 முதல் ஜனவரி 17 வரையும், 

சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) டிசம்பர் 7 முதல் ஜனவரி 25 வரையும், மும்பை குர்லா - மதுரை எக்ஸ்பிரஸ் (22101) டிசம்பர் 6 முதல் ஜனவரி 24 வரையும், ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535) டிசம்பர் 6 முதல் ஜனவரி 18 வரையும், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20895) டிசம்பர் 1 முதல் ஜனவரி 20 வரையும், தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) டிசம்பர் 3 முதல் ஜனவரி 24 வரையும், தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20683) டிசம்பர் 3 முதல் ஜனவரி 25 வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory