» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 97.36% தேர்ச்சி: தமிழகத்தில் 5வது இடம் பிடித்தது!
திங்கள் 8, மே 2023 11:29:39 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில், 10,498 மாணவிகள், 8,513 மாணவர்கள் என மொத்தம் 19ஆயிரத்து 11 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்கள் 8196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 96.28 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 5வது இடம் பிடித்துள்ளது. மாணவிகள் 10,313 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.24 சதவீதம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18ஆயிரத்து 509 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.36 ஆகும். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜூன் 19-ல் நடைபெறும் துணைத்தேர்வுக்கு வின்ணப்பித்து பங்கேற்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேலூர் ரயில் நிலையத்தின் அருகில் புதியசாலை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!
புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)

ரஜினி யாருக்கும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை : சத்யநாராயண ராவ் பேட்டி!
புதன் 31, மே 2023 12:04:31 PM (IST)
