» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 8, பிப்ரவரி 2023 10:23:04 AM (IST)
தூத்துக்குடி அருகே கோவிலில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் பொட்டுத் தாலி, உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சங்கர் என்பவர் தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 12:28:08 PM (IST)

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:50:58 AM (IST)

தூத்துக்குடியில் பில்டிங் காண்ட்ராக்டர் கார் திருட்டு: வாலிபர் கைது
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:42:03 AM (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:24:00 AM (IST)

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:54:15 AM (IST)

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)
