» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் விடுவிப்பு: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 31, ஜனவரி 2023 4:20:36 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அனிதா ராதா கிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில், ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory