» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி: அமைச்சர் பி.கே.சேகர் பாபு பங்கேற்பு
வெள்ளி 23, செப்டம்பர் 2022 5:22:18 PM (IST)

பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் இந்துசமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டார்.
பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து நவராத்திரி நடைபெறவுள்ள திருவனந்தபுரத்திற்கு கேரளா பாரம்பரிய முறைபடி மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியானது இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு கேரளா அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் உடைவாளினை கைமாற்றம் செய்து, தெரிவிக்கையில்:-
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரிவிழாவில் குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்பநாபபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு அங்கு பத்துநாட்கள் நவராத்திரிவிழாவில் பூஜையில் வைப்பது வழக்கம். வரும் 26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரிவிழா துவங்குவதையடுத்து அதில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் சாமி சிலைகள் நேற்று சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைந்ததை தொடர்ந்து இன்று உடைவாள் கைமாற்றம் செய்யப்பட்டது.
இந்த உடைவாள் அரண்மனை வளாகத்திலுள்ள தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆலயத்திலிருந்து சரஸ்வதி அம்மன் எழுந்தருளி யானைமீதேறியும் வேளிமலை குமாரசுவாமி மற்றும் முன்னுதித்தநங்கையம்மன் சிலைகள் பல்லக்கிலும் பத்பநாபபுரம் அரண்மனைக்குள் எழுந்தருளியதையடுத்து இருமாநில காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் வாத்தியமேளங்களுடன் ஊர்வலமாக கேரளா புறப்பட்டு சென்றது இன்று மாலை குழித்துறை மஹாதேவர் திருக்கோவிலில் தங்கும் சாமி சிலைகள் நாளை காலையில் தமிழக கேரளா எல்லையான களியக்காவிளையில் கேரளா அரசிடம் ஒப்படைக்கபடுகிறது. இவ்வாறு இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கேரளா மாநிலம் சார்பில் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், கூடுதல் ஆணையர் ஆர்.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை,மாவட்ட இந்துசமய இணை ஆணையர் ஞானசேகர், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், கல்குளம் வட்டாட்சியர் வினோத், அரசு வழக்கறிஞர் ஜெகதேவ், பொறியாளர் வர்க்கீஸ், ரயிஸ் சுபிகான் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)
