» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக பொன்விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!

புதன் 27, அக்டோபர் 2021 3:03:34 PM (IST)தூத்துக்குடியில் அதிமுக 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

அ.இ.அதிமுக 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் 39வது வட்டக் தகவல் தொழிலில் நுட்பப் பிரிவு செயலாருமான பா.திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில்,  வடக்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து வேட்டி, சேலை, அயர்ன் பாக்ஸ், தையல் மெஷின் ஆகியவை வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர் வீரபாகு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே.பிரபாகர், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், தலைமைக் கழகப் பேச்சாளர் முருகானந்தம், வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முனியசாமி, செங்குட்டுவன், இலட்சுமண பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory