» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வட்டாட்சியர் அலுவலக பணிக்காக பழமைவாய்ந்த மரங்கள் வெட்டிசாய்ப்பு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

புதன் 28, ஜூலை 2021 10:31:54 AM (IST)



சாத்தான்குளத்தில்  வட்டாட்சியர் அலுவலக  கட்டிடப்பணிக்காக பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்  பழைய காவல்  நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில் புதிய  வட்டாட்சியர்  அலுவலகம்  அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் எம்எல்ஏ, எஸ்.பி.  சண்முகநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பழமை வாய்ந்த மரங்கள் நின்றன. அதனை அகற்றப்பட கூடும்  என  தெரிவிக்கப்பட்ட நிலையில் மரங்கள் அகற்றாமல் கட்டட பணிகளை தொடங்க வேண்டும் என  ஓப்பந்தகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில்  கட்டட பணிக்காக அதில் நின்ற பழமை வாய்ந்த 4 மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது  உலக வெப்பமாகுதல்  தடுக்கவும், மழை பெற வேண்டியும் மரங்கள் நட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பழைய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது மிகுந்த வருத்தம் தரும்  வகையில் உள்ளதாக பொதுமக்கள்  குற்றச்சாட்டியுள்ளனர். 


மக்கள் கருத்து

தூத்துக்குடி ஏரியா காரன்Jul 28, 2021 - 10:47:59 AM | Posted IP 162.1*****

இந்த திராவிட ஆட்சியில் இயற்கையை பாதுகாக்க தெரியவில்லை, மரத்தை வெட்டாமல் வேற இடத்தில நடவ ஒரு மெசின் வாங்க துப்பில்லை.. கோடி செலவு பண்ணி சிலை, சாக்கடை, தான் அமைப்பாங்களாம்.. விளங்கிடும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory