» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கப்பல்களைத் தாக்கினால் ஈரானின் மின் நிலையங்கள் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

வியாழன் 23, ஜூலை 2026 11:36:09 AM (IST)

Trumpatack.jpg

ஈரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து, மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச அளவில் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும்: இனிவரும் காலங்களில், ஹார்முஸ் நீரிணை வழியே செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் ஈரான் ஏவுகணை, ராக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்தவொரு ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினாலும், அமெரிக்கா அதற்குப் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும்.

அதன்படி, ஈரானின் பாலங்கள் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டுவீசி அவை முற்றிலும் அழிக்கப்படும். இந்த நடவடிக்கை ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளுக்கும் பொருந்தும்." இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory