» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் இந்தியப் பணியாளர்கள் இருந்த கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்திற்கு இந்திய மத்திய அரசு தனது கடுமையான தூதரக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
மேற்காசியப் பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் சூழல் உருவானதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழியை ஈரான் ராணுவம் மூடியுள்ளது. இச்சூழ்நிலையில், அந்த சர்வதேச நீர்வழிப் பாதை வழியாகப் பயணித்த 'எம்டி எல் பஹியாக்' (MT El Bahiyac) மற்றும் 'எம்டி மோம்பஸா' (MT Mombasa) ஆகிய இரண்டு கப்பல்கள் மீது ஈரான் படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கப்பலில் பணியிலிருந்த இந்திய ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்ததோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இக்கோரச் சம்பவத்திற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், புதுடெல்லியில் உள்ள ஈரானின் துணைத்தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தது. அவரிடம் இத்தாக்குதல் குறித்த இந்தியாவின் அதிகாரப்பூர்வக் கண்டன அறிக்கை நேரடியாக வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன:
சர்வதேச நீர்வழிப் பாதைகளில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், கடல்சார் பணியாளர்களைக் குறிவைத்தும் நடத்தப்படும் இத்தகைய ராணுவத் தாக்குதல்கள் ஏற்கத்தக்கவை அல்ல.
மேற்காசியப் பகுதியில் வன்முறை மற்றும் ராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வருவது சர்வதேசப் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, சம்பந்தப்பட்ட நாடுகள் வன்முறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரச முயற்சிகளுக்கு இருதரப்பும் உடனடியாகத் திரும்ப வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிகளவு போதையால் சவுதி இளவரசர் மரணம்: பிரிட்டன் நீதிமன்ற விசாரணையில் உறுதி
வெள்ளி 24, ஜூலை 2026 4:15:17 PM (IST)

கப்பல்களைத் தாக்கினால் ஈரானின் மின் நிலையங்கள் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வியாழன் 23, ஜூலை 2026 11:36:09 AM (IST)

ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை: இந்தியா, சீனா வந்த 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் திசைமாற்றம்!
புதன் 22, ஜூலை 2026 4:22:18 PM (IST)

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)








