» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: 40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்!

வெள்ளி 10, ஜூலை 2026 4:54:38 PM (IST)

PModiNz.jpg

அரசு முறைப் பயணமாக நியூசிலாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 6 அன்று அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூலை 8 அன்று ஆஸ்திரேலியா சென்ற அவர், அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸை நேரில் சந்தித்து இருதரப்பு முக்கியக் கூட்டுறவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இப் பயணத்தின் போது, ஆஸ்திரேலியா வசம் இருந்த இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் முறைப்படி திரும்ப ஒப்படைக்கப்பட்டன. மேலும், ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, தனது அடுத்தகட்டப் பயணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குப் பிரதமர் மோடி வந்தடைந்தார். விமான நிலையத்திற்கு நேரில் வந்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பிரதமர் மோடியை வரவேற்றார்.

இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்குப் பிரதமர் லக்ஸனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், இப்பயணம் இருநாடுகளின் உறவிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தியா - நியூசிலாந்து இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஆக்லாந்தில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் உரையாற்ற உள்ளார்.


மக்கள் கருத்து

கந்தசாமி அவர்களேJul 13, 2026 - 09:13:14 PM | Posted IP 172.7*****

எல்லா நாடு தலைவர்கள் நம் மோடிக்கு மதிப்பளிக்கிறார்கள், நாம முன்னாள் முதலை அமைச்சர் தத்தி சொடலை, குடும்பங்கள் போனாலும் டிரம்ப் கூட வரவேற்கமாட்டான், அங்குள்ள கொத்தடிமைகள் மட்டும்தான் வரவேற்ப்பார்கள். பப்பு ராகுல் காந்தி போனாலும் அங்கு தீவிரவாதிகள், தேசத்துரோகிகள் தான் வரவேற்பார்கள் அவ்வளவுதான்.

கந்தசாமிJul 11, 2026 - 11:07:29 AM | Posted IP 104.2*****

இன்னும் போகாத ஊர் ஏதும் இருக்கிறதா ஓசியில் எல்லா நாட்டையும் சுற்றி பார்த்தாகி விட்டாச்சு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory