» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரிவினைவாதிகளின் குற்றச்செயல்களுக்கு இடம் இல்லை: இந்தியாவிடம் நியூசிலாந்து பிரதமர் உறுதி!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:26:02 PM (IST)

நியூசிலாந்தில் காலிஸ்தான் கோரும் பிரிவினைவாதிகளின் இந்தியாவுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அளித்த பேட்டியில், நியூசிலாந்து நாடு பேச்சு சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்கிறது என்றாலும், அதன் பெயரால் நிகழ்த்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது வன்முறையும் நாட்டின் சட்டத்தின்கீழ் மிகக் கடுமையாகக் கையாளப்படும் என்று எச்சரித்துள்ளார். காலிஸ்தான் விவகாரம் இந்தியாவில் பெரிய துயரத்தையும், பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தாங்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் பேசிய பிரதமர், நாங்கள் ஜனநாயக நாடாக இருந்து கருத்துச் சுதந்திரத்தை வழங்கினாலும், மக்கள் எங்கள் நாட்டு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவுகளில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு வன்முறைச் செயல்களும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார். நியூசிலாந்து போலீசார் இந்தப் பிரிவினைவாதப் பிரச்னைகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருந்து, அவற்றைச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!
வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!
வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)

ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:59:06 PM (IST)

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி கமேனி இறுதிச் சடங்கில் பங்கேற்பு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி!
புதன் 8, ஜூலை 2026 12:43:48 PM (IST)

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு சர்வதேச வளாகம்: ஜகார்த்தாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 10:23:55 AM (IST)

இலங்கையில் 2-வது நாளாக நீடித்த சிறை மோதல்: 25 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:54:53 AM (IST)








