» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காபி குடிப்பது போன்ற வீடியோ போலி: க்ரூக் ஏஐ தகவல்!
திங்கள் 16, மார்ச் 2026 5:53:38 PM (IST)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காபி குடித்துக்கொண்டே பேசுவது போன்ற வீடியோ போலியானது என்றும், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் எக்ஸ் தளத்தின் ஏஐ மென்பொருளான 'க்ரூக்' (Grok) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் ஈரான் அறிவித்தது. ஆனால், இந்தத் தகவலை அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டவட்டமாக மறுத்தன. நெதன்யாகு நலமுடன் இருப்பதாக இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து கூறி வந்தது.
தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெதன்யாகு கையில் காபி கோப்பையுடன் சாதாரணமாகப் பேசும் வீடியோ ஒன்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. எனினும், அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
க்ரூக் (Grok) வெளியிட்ட உண்மை: இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து எக்ஸ் தளப் பயனர்கள் அதன் ஏஐ மென்பொருளான 'க்ரூக்'-இடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த க்ரூக், அந்த வீடியோ ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
"இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஒரு காபி கடையில் அமர்ந்து கொண்டு ஈரான் மற்றும் லெபனான் விவகாரங்கள் குறித்துப் பேசுவது போன்ற காட்சிகள் போலியானவை. இதில் உண்மையான நிகழ்வுகள் இடம்பெற்றதற்கான அடையாளங்கள் இல்லை. என்று க்ரூக் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பார்த்த பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். குறிப்பாக, நெதன்யாகு காபி கோப்பையுடன் நடந்து வரும்போது, ஒரு கட்டத்தில் அவரது முக அமைப்பு மாறுவதையும், காபி கோப்பையின் வடிவம் சீரற்று இருப்பதையும் சுட்டிக்காட்டி அது 'டீப் ஃபேக்' (Deepfake) வீடியோவாக இருக்கலாம் எனப் பதிவிட்டு வந்தனர். தற்போது க்ரூக் மென்பொருளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)

பாகிஸ்தானில் பிரபல மதகுரு சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்
செவ்வாய் 5, மே 2026 4:23:41 PM (IST)

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 21 பேர் பலி; 61 பேர் படுகாயம்!
செவ்வாய் 5, மே 2026 11:14:44 AM (IST)

வெறும் காகிதப் புலிகள்: அமெரிக்காவின் முற்றுகை மிரட்டலுக்கு உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை!
சனி 2, மே 2026 11:42:48 AM (IST)

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 1, மே 2026 11:28:03 AM (IST)










