» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஞாயிறு 8, மார்ச் 2026 8:56:43 PM (IST)

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அந்த நாடு நிபந்தனையின்றிச் சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் ஈரான் தற்போது நிலைகுலைந்து சிதைந்துள்ளது. இதன் விளைவாகவே, ஈரான் தனது அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், இனி அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளது. ஒரு காலத்தில் மத்திய கிழக்குப் பகுதியை ஆள விரும்பிய ஈரான், இன்று தனது திட்டங்களில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது.

ஈரான் அண்டை நாடுகள் எனக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழலில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த நாடு நிபந்தனையின்றிச் சரண் அடைய வேண்டும். ஈரானின் ராணுவமோ அல்லது அதிகாரத்தில் உள்ள தலைமையோ முழுமையாக அகற்றப்படும் போதுதான் இந்தப் போர் முடிவுக்கு வரும்.

அடுத்த ஈரானியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். அமெரிக்காவை மீண்டும் ஒரு போருக்குள் இழுக்காத, அமைதியை விரும்பும் ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். ஈரானுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படைகள் அழிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஏவுகணைகளையும் நாங்கள் அழித்துவிட்டோம். இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடரலாம்.

பள்ளி மீதான தாக்குதலுக்கு மறுப்பு: ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. அந்தத் தாக்குதலை ஈரானே நடத்தியுள்ளது. அவர்களின் இலக்குகள் துல்லியமாக இல்லாததே இதற்குக் காரணம். இவ்வாறு டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory