» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜோர்டானில் முதியோர் காப்பகத்தில் தீ; 6 பேர் பலி: 50 பேர் படுகாயம்!
சனி 14, டிசம்பர் 2024 12:46:30 PM (IST)

ஜோர்டான் தலைநகர் அம்மானில் முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு முதியோர் காப்பகம் செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். எனவே சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்றொருபுறம் அந்த காப்பகத்தில் சிக்கிய முதியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 4:08:45 PM (IST)

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)
