» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: அமைச்சர் ஹக்கானி பலி!
வியாழன் 12, டிசம்பர் 2024 12:18:45 PM (IST)
ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் தலிபான் அகதிகளுக்கான அமைச்சர் கலீல் ரஹ்மான் ஹக்கானி உயிரிழந்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தலிபான் அகதிகளுக்கான அமைச்சரக கட்டிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில், கலீல் ஹக்கானி மற்றும் 6 பேர் பலியானார்கள் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளாார்.
ஆனால், ஆப்கானிய அரசு அதிகாரிகள் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு குண்டுவெடிப்பில் முக்கிய பிரமுகர் ஒருவர் பலியாவது இதுவே முதல் முறையாகும்.