» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் கொரியா அதிபர் வெளிநாடு செல்ல தடை!

செவ்வாய் 10, டிசம்பர் 2024 4:49:44 PM (IST)

தென் கொரியாவில் அவசர நிலை அறிவித்த விவகாரத்தில் அந்நாட்டின் அதிபர் யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டது. 

எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory