» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் : எலான் மஸ்க் ஆருடம்!
சனி 7, டிசம்பர் 2024 11:25:00 AM (IST)
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என உலகின் பிரபலமான தொழிலதிபரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் ஆருடம் கூறியுள்ளார்.
எலான் மஸ்க், தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூடியவர். அவர் இரு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று ஜோதிடம் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டிய எலான் மஸ்க் மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என பதிவிட்டிருந்தார்.