» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை : ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

வியாழன் 5, டிசம்பர் 2024 12:10:22 PM (IST)

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புதின் பேசியதாவது: இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது 

பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா திட்டம்' பாராட்டக் கூடியது. இந்திய பிரதமர் மோடியும், அவரது தலைமையிலான அரசும் நிலையான சூழலை உருவாக்கி வருகிறது. இந்தியாவுக்கு முதலில் வாருங்கள் என்ற கொள்கையை இந்தியாவின் தலைமை பின்பற்றுவதே இதற்கு காரணம். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்

ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கான தேவை உள்ளது.கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் அளவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம்" என்றார்.

இந்தியாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். புதினின் இந்த பயணத்தின் போது இரு நாட்டு நலன்கள் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory