» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியா-வடகொரியா கூட்டணியால் புதிய அச்சுறுத்தல் : ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

திங்கள் 21, அக்டோபர் 2024 5:49:38 PM (IST)

ரஷியா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்டு உள்ள கூட்டணிக்கு உலக தலைவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. இதன் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. எனினும், இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை எதுவும் பெரிய பலன் தரவில்லை.

இந்நிலையில், ரஷியாவுக்கு ராணுவ உதவியை வடகொரியா செய்து வருகிறது என தகவல் வெளியானது. ராணுவ வீரர்களையும் அனுப்பி வருகிறது. இது போரை தீவிரப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ரஷியா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்டு உள்ள கூட்டணிக்கு உலக தலைவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார். இந்த ஆபத்து தரும் கூட்டணியால் போர் நீளும் என அவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் ரஷியாவுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இந்த உதவிக்கு பதிலாக, ரஷியா அதனை எப்படி திருப்பி செலுத்த போகிறது? என கேட்டுள்ள அவர், ரஷியாவுக்கு ராணுவ அதிகாரிகளையும் வடகொரியா அனுப்பி வருவது பற்றிய தகவலை வெளியிட்டார். இந்த தீவிர அச்சுறுத்தல் பற்றி சர்வதேச நட்பு நாடுகள் ஒரு வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் அரசு எதிர்பார்க்கிறது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கான சான்றுகளை செயற்கைக்கோள்கள் வழியேயும் மற்றும் ரஷியாவில் இருந்து வெளிவரும் வீடியோக்களால் நாம் அனைவரும் காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், போர் நீடிக்குமே தவிர, உலக அளவில் ஒருவருக்கும் பலன் ஏற்படாது என தெரிவித்ததுடன், போரானது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory