» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு: 20 பேர் உயிரிழப்பு!

வெள்ளி 11, அக்டோபர் 2024 12:56:38 PM (IST)

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க ஊழியர்கள் மீது பலூசிஸ்தான் கிளர்ச்சி குழு நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சிக்குழு பொதுமக்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்நிலையில், அம்மாகாணத்தின் துகி பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கத்தின் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர், வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் பலூசிஸ்தான் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory