» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இரங்கல்!

வியாழன் 10, அக்டோபர் 2024 12:48:55 PM (IST)



தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய மறைவு பற்றி கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க ஆழ்ந்த அக்கறையுடன் இருந்தவர் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், கூகுள் நிறுவனத்தில் வைத்து கடைசியாக அவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. வெய்மோவின் முன்னேற்றம் பற்றி நாங்கள் பேசினோம். அவருடைய தொலைநோக்கு பார்வை கேட்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. அவர், ஒரு அசாதாரண வர்த்தகம் மற்றும் கொடைத்தன்மைக்கான மரபை விட்டு சென்றிருக்கிறார். 

இந்தியாவில் நவீனத்துவ தொழிலை வழிநடத்தி செல்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஏதுவாக உதவியாக இருந்தவர் என்று தெரிவித்து உள்ளார். அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 2008-ம் ஆண்டில் இந்தியாவின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory