» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சர்வதேச அளவில் போர் - பெருந்தொற்று அபாயம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:28:35 PM (IST)
சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும் என மைக்ரோசாப்ட் நிறுவனரும், நன்கொடையாளருமான பில்கேட்ஸ் எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இன்றைய உலகில் சில இடங்களில் ஏற்பட்டு உள்ள பதற்றமானது மற்றொரு பெரிய போருக்கு வழிவகுக்கக்கூடும். ஒரு வேளை இதனை நாம் தவிர்க்க முயன்றாலும், மற்றொரு பெருந்தொற்று ஏற்படலாம். இது, அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடும். உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தாலும், அது நாம் எதிர்பார்த்ததை விடக்குறைவு.எதில் நாள் அதிகம் கற்றுக் கொண்டோம். எங்கு பிரச்னை உள்ளது என்பதை நமது செயல்பாடுகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஒரு வேளை இது அடுத்த 5 ஆண்டுகளில் இது மேம்படும். ஆனால், இதுவரை அது இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது. உலகத்தை வழிநடத்தும் மற்றும் முன்மாதிரியாக இருக்கும் என அமெரிக்கா மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கேற்ப அந்நாடு செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் உடனான மோதலில் மிக விரைவான வெற்றி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:57:28 PM (IST)

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: பாகிஸ்தானில் தினசரி 2 மணி நேர மின்வெட்டு அமல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:20:47 AM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: அமெரிக்கா பின்வாங்க சவுதி அரேபியா வலியுறுத்தல்
புதன் 15, ஏப்ரல் 2026 4:35:33 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8% உயர்வு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:43:28 AM (IST)

அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:56:21 AM (IST)

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:07 PM (IST)





