» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தொழுகை நேரத்தில் துர்கா பூஜை வழிபாட்டுக்கு கட்டுப்பாடு: வங்கதேச அரசு

வியாழன் 12, செப்டம்பர் 2024 11:59:26 AM (IST)



வங்கதேசத்தில் தொழுகை நேரத்தில் துர்கா பூஜை வழிபாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை இடைக்கால அரசு விதித்துள்ளது. 

வங்கதேசத்தில் தொழுகை நேரத்தில்  துர்கா பூஜை வழிபாட்டில் இசைக் கருவிகள் மற்றும் ஒலி எழுப்பும் சாதனங்களை அணைத்து வைக்க பூஜை நடத்தும் குழுக்கள் ஏற்றுக் கொண்டதாக உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எம்.டி ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், தொழுகை தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஒலி எழுப்பும் சாதனங்கள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் துர்கா பூஜையை வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

தற்போது வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டு, ராணுவ உதவியுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களில் 32,666 சிலை வைத்து பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ளதாக ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும், பூஜை நடைபெறும் இடங்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், தடையின்றி விழா நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory