» செய்திகள் - விளையாட்டு » உலகம்

திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடியில் தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 12:03:03 PM (IST)



திருச்சியில் Jabil நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. திருச்சியில் Jabil நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory