» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிகாகோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 12:07:02 PM (IST)



சிகாகோ சென்றடைந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்ச் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த் கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ மாகாணத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். அங்கு சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடனம், சிலம்பம் என பாரம்பரிய முறைப்படி முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களுடன் முதல்-அமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார். சிகாகோவில் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory