» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நீதிபதிகள் பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!
சனி 10, ஆகஸ்ட் 2024 4:07:34 PM (IST)

நீதிபதிகள் பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்க இறக்குமதி இறைச்சியில் பாக்டீரியா பாதிப்பு? தடை விதிக்க சீனா முடிவு!!
புதன் 16, ஏப்ரல் 2025 12:46:01 PM (IST)

ஹமாசுக்கு ஆதவு: இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:52:32 AM (IST)

வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி வழக்கு : மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது!
திங்கள் 14, ஏப்ரல் 2025 12:01:43 PM (IST)
