» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும்: ஒபாமா கருத்து!

வெள்ளி 19, ஜூலை 2024 12:57:40 PM (IST)

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகக் கோரி பராக் ஒபாமா தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக போட்டியிடுகிறார். இந்நிலையில், ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியினரிடையே கூறி வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

ஏனெனில், போட்டிகள் நிறைந்த முக்கியமான ஏழு மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், நான்கு மாநிலங்களில் பைடனுக்கு எதிர்மறையான முடிவுகளே கிடைத்துள்ளன. இதனால் தான், ஜோ பைடனை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஒபாமா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதத்தின் போதே, ஜோ பைடனின் தடுமாற்றம் பேசுபொருளாகியிருந்தது.

அப்போதிலிருந்தே, அவர் அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. தேர்தலில் பைடன் போட்டியிடுவதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு கூறி, ஜனநாயகக் கட்சியின் 264 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் வரையில் கருத்து தெரிவித்தனர்.தொடர்ந்து, பலரும் தனிப்பட்ட முறையில் தங்களின் எதிரான கருத்துகளையும் தெரிவித்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory