» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோவில் பஸ் மீது லாரி மோதி 24 பேர் சாவு: 5 பயணிகள் படுகாயம்!

திங்கள் 28, அக்டோபர் 2024 8:32:02 AM (IST)



மெக்சிகோவில் சுற்றுலா சென்ற இடத்தில் பஸ் மீது லாரி மோதி 24 பேர் உயிரிழந்தனர். 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து ஒரு பஸ் புறப்பட்டது. சிகுவாகுவா மாகாணம் சியுடாட் நகர் நோக்கிச் சென்ற அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அந்த பஸ் ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பாலத்தில் சென்றபோது எதிரே ஒரு லாரியும் வேகமாக சென்றது. 

அப்போது திடீரென அந்த லாரியின் டிரைலர் கழன்றது. எனவே எதிரே வந்து கொண்டிருந்த பஸ் மீது அந்த லாரியின் டிரைலர் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு சென்றதும் பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.

எனினும் இந்த விபத்தில் 24 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 5 பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் அங்கு நெடுஞ்சாலை மூடப்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory