» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம்‍: இந்தியா உட்பட 90 நாடுகள் புறக்கணிப்பு

சனி 13, ஜூலை 2024 12:05:48 PM (IST)

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா உட்பட 90 நாடுகள் புறக்கணித்தன.

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.இதனிடையே அண்மை காலமாக உக்ரைன் மின்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நா.வில் நேற்று முன்தினம் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. 'ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான தீர்மானத்தை உக்ரைன் முன்மொழிந்தது. பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் தீர்மானத்தை வழிமொழிந்தன.

அந்த தீர்மானத்தில் "உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப்படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும்.

குறிப்பாக ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷியா தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உக்ரைனின் அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் அணு விபத்து அல்லது விபத்து ஏற்படும் அபாயத்தை ரஷியா அதிகரிக்கிறது.

எனவே, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைனின் இறையாண்மையின் கீழ், அந்நாட்டு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டிற்கு உடனடியாக ஆலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொதுசபை, உக்ரைனின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.ரஷியா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.இந்தியா, சீனா, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான் உள்பட 99 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory