» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர்க்களத்தில் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது: ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி

புதன் 10, ஜூலை 2024 5:52:36 PM (IST)



இது போருக்கான நேரமல்ல, போர்க்களத்தில் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்று ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அந்நாட்டு இசைக் கலைஞர்கள், நமது தேசிய கீதத்தை இசைத்து மோடியை வரவேற்றனர். அந்நாட்டு சான்சிலர் மாளிகைக்கு வந்த மோடியை, சான்சிலர் கார்ல் நெஹமர் வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, கார்ல் நெஹ்மர் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதுடன், ஐரோப்பிய கவலைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து இந்தியாவிடம் தெரிவிப்பது எனது கடமை. மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஆலோசித்தோம்.இந்தியா ஒரு செல்வாக்கு பெற்ற நாடு. ரஷ்யா - உக்ரைன் இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது.இவ்வாறு அவர் கூறினார்.

பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: எனது 3வது ஆட்சி காலத்தில் ஆஸ்திரியா வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போருக்கான நேரமல்ல என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மனித குலம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்தோம். 

பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு கூட்டணியுடன் இணைந்து ஆஸ்திரியா பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்க முடியாது. அதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்ற உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory