» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் களம்காணும் 8 தமிழர்கள்!

வியாழன் 4, ஜூலை 2024 10:07:28 AM (IST)



பிரிட்டனில் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் போட்டியிடுகின்றனர்.

பிரிட்டனின் புதிய அரசைத் தீர்மானிக்கக் கூடிய இந்தத் தேர்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையில்(ஹவுஸ் ஆந்ப் காமன்ஸ்) உள்ள 650 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இரு கட்சிகள் சார்பிலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட முன்பைவிட அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பிரிட்டனில் குடியேறிவர்களுக்கும், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆளும் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory