» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நான் அதிபரானால் உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன்: டொனால்ட் டிரம்ப்!

செவ்வாய் 2, ஜூலை 2024 3:50:34 PM (IST)

"நான் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன்" என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்தாண்டு சிஎன்என் அரங்கத்தில் பேசுகையில், ”ரஷியர்களும், உக்ரேனியர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அதனை நிறுத்த விரும்புகிறேன். நான் நினைத்தால் அதை 24 மணி நேரத்தில் செய்துவிடுவேன்” என்று டிரம்ப் கூறியிருந்தார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோரைச் சந்தித்து இதனை நடத்திக் காட்டுவதாக கூறியிருந்த டிரம்ப், மீண்டும் அதனை தற்போதைய தேர்தல் பிரசாரத்திலும் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் பைடனுடன் நடந்த விவாதத்தில், "நாம் புதினால் மதிக்கப்படும் ஒரு உண்மையான அமெரிக்க அதிபரைக் கொண்டிருந்தால், அவர் ரஷியாவை உக்ரைனுடன் போர் செய்ய அனுமதித்திருக்க மாட்டார்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதுகுறித்து நிருபர்களுடன் பேசிய ரஷிய பிரதிநிதி வாசிலி நெபென்சியா, 'உக்ரைன் பிரச்சினையை ஒரே நாளில் டிரம்ப்பால் தீர்க்க முடியாது. கடந்த 2022 ஏப்ரலில் உக்ரைனின் மேற்குப் பகுதி ஆதரவாளர்கள் இரு நாடுகளுக்கிடையே தீர்மானமாகவிருந்த அமைதி ஒப்பந்தத்தைத் தடுத்து ரஷியாவுடன் போரிடுமாறு கூறினர். தற்போது செலன்ஸ்கி அமைதி ஒப்பந்தம் எனும் பெயரில் நகைச்சுவை திட்டத்தைக் கொண்டு வருகிறார்’ என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory