» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழப்பு 21 ஆக அதிகரிப்பு!

புதன் 26, ஜூன் 2024 11:23:38 AM (IST)




ரஷியாவில் தேவாலயம், காவல் நிலையம் மீதும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவின் காகசஸ் மாகாணம் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது டெர்பென்ட் நகரில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து நிகோலாய் கோடெல்னிகோவ் (66) என்ற பாதிரியாரை அவர்கள் கழுத்தை அறுத்து கொன்றனர். இதனால் அங்கிருந்தவர்கள் தேவாலய அறைக்குள் ஓடிச்சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டனர். சில மதவழிபாட்டு தலங்களை தீவைத்தும் கொளுத்தினர்.

அதன்பின்னர் பயங்கரவாதிகள் அங்குள்ள காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் இந்த தாக்குதலில் பாதிரியார், போலீசார் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை தற்போது 21 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory