» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் மெலோனி பகிர்ந்த வீடியோ!

சனி 15, ஜூன் 2024 3:55:00 PM (IST)



இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி வீடியோவை எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹலோ ஃபிரம் மெலோடி டீம் என்று அவர் பதிவிட்டு அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இந்திய பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் மெலோனியும் சிரித்தபடி ஹாய் சொல்லும் வீடியோ இடம்பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட போது, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்திருந்தது மிகவும் பரவலானது. இதனை 4.70 கோடி பார்வையாளர்களின் விருப்பத்தைப் பெற்றிருந்தது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் நடைபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு இத்தாலி அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory