» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இம்ரான் கானின் கட்சி அலுவலகத்தில் சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 4, ஜூன் 2024 4:51:51 PM (IST)

இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 71) மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அவ்வகையில், பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய நிவாரணமாக கருதப்படுகிறது. எனினும், வேறு சில வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதால் இப்போதைக்கு சிறையில் இருந்து விடுதலை பெற வாய்ப்பில்லை

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மத்திய அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி பி.டி.ஐ. அலுவலகத்தில் தலைநகர மேம்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், சட்டவிதிகளை மீறியதாக கூறி, கட்சி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோட்டில் பி.டி.ஐ. கட்சி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory