» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை:அமெரிக்காவில் அறிமுகம்

திங்கள் 27, மே 2024 12:39:21 PM (IST)அமெரிக்காவில் நாய்களுடன் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நாய்களுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் 'பார்க்'(Bark) என்ற நிறுவனத்தின் சார்பில் புதிதாக 'பார்க் ஏர்லைன்ஸ்'(Bark Airlines) என்ற விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக நாய்களுக்கான சொகுசு விமான பயணத்தை வழங்குகிறது.

இந்த விமானத்தில் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், நாய்களுக்கு துணையாக அவற்றின் உரிமையாளர்களும் பயணம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாய்களுக்கென சவுகரியமான இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் டயப்பர்களும் வழங்கப்படுகின்றன.

தற்போது நியூயார்க்-லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்-லண்டன் ஆகிய நகரங்களிடையே விமான சேவை வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிக நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் 'பார்க் ஏர்லைன்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் விலை உள்நாட்டு பயணத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.4.98 லட்சமாகவும், வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.6.64 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory