» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியப் புடவைகளை எரிக்க வேண்டுமா? எதிர்கட்சிகளுக்கு வங்கதேச பிரதமர் பதிலடி!!

திங்கள் 1, ஏப்ரல் 2024 9:31:33 PM (IST)

வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் எதிர்க்கட்சியினர் சமையல் செய்து உண்பார்களா? என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கேள்வி எழுப்பினார். 

வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் வங்கதேச பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணி வருகிறார் ஷேக் ஹசீனா. கடந்த பிப்ரவரி மாதம் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகைப் புரிந்தார்.

இந்நிலையில், வங்கதேச தேர்தலில் ஹேக் ஹசீனாவுக்கு இந்தியா உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தை வங்கதேச எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தொடங்கியது. சமூகவலைதளங்களில் இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அமைதிகாத்துவந்த பிரதமர் ஷேக் ஹசீன தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார். தாகா தலைமை அலுவலகத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர்களின் மனைவி வைத்திருப்பது எத்தனை இந்திய புடவைகள் எத்தனை தெரியுமா? பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்துகிறார். அவர்கள் தங்கள் மனைவியிடம் இருக்கும் இந்திய புடவைகளை புறக்கணிக்காதது ஏன்?

தங்கள் கட்சி அலுவலகம் முன்பு தங்கள் மனைவியின் இந்திய புடவைகளை எரிப்பார்களா? அப்படி செய்தால், உண்மையாகவே அவர்கள் இந்தியப் பொருள்களை புறக்கணிப்பதாக ஏற்றுக்கொள்ளலாம். எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அவர்களின் மனைவி இந்தியாவிற்கு சென்று புடவைகளை வாங்கிவருவதோடு மட்டுமின்றி, இங்கு விற்பனையும் செய்துள்ளனர். இந்திய ஆடைகளை மட்டுமல்ல, மசாலா பொருள்களையும் அவர்கள் புறக்கணிப்பார்களா?

வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் அவர்கள் சமையல் செய்து உண்பார்களா? இதற்கு எதிர்க்கட்சி முதலில் பதில் கூற வேண்டும் என கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.


மக்கள் கருத்து

இந்தியன்Apr 2, 2024 - 07:00:42 PM | Posted IP 172.7*****

சில இஸ்லாமியர் வாழும் நாடுகளில் எல்லாம் பாதிப்பேர் முட்டாள்கள், பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள் , தீவிரவாதி ஆதரவாளர்கள் , இந்துக்களின் எதிரிகள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory