» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மூக்கில் 68 தீக்குச்சிகளை திணித்து சாதனை படைத்த டென்மார்க் வாலிபர்!!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 10:26:34 AM (IST)
டென்மார்க்கை சேர்ந்த 39வயது நபர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்த 39 வயதான பீட்டர் வான் டாங்கன் புஸ்கோவ் வித்தியாசமான முறையில் ஒரு சாதனை படைத்துள்ளார். அவர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு மிகப்பெரிய நாசி மற்றும் மிகவும் நீளமான தோல் உள்ளது. அது எனக்கு சாதனை படைக்க உதவியது என்று நம்புகிறேன் என கூறி உள்ளார்.
கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சிறு வயதில் கூட மூக்கில் பொருட்களை செருகும் ஆசை தனக்கு இருந்ததில்லை என கூறும் புஸ்கோவ் தற்போது சாதனைக்காக இந்த சவாலை ஏற்றதாக கூறினார். மேலும் நான் எப்போதும் வாழ்க்கையின் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான அம்சங்களை தேட முயற்சிப்பேன் என்றார்.