» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவனில் வைத்த குழந்தை மரணம் : தாய் கைது!

திங்கள் 12, பிப்ரவரி 2024 10:18:31 AM (IST)அமெரிக்காவில் தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவனில் குழந்தையைத் தாய் வைத்ததால், அந்தக் குழந்தை இறந்தது.

அமெரிக்காவின் மிஸெளரி மாகாணம், கான்சாஸ் சிட்டியைச் சோ்ந்த மரியா தாமஸ் என்ற பெண் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டுக்கு போலீஸாா் சென்றனா். குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருப்பதைப் பாா்த்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, மரியா தாமஸ் தன் குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பதற்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவன் அடுப்பில் தவறுதலாக வைத்ததும், அதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததும் தெரியவந்தது.

இது தொடா்பாக ஜாக்சன் கவுன்டி அரசு வழக்கறிஞர் ஜீன் பீட்டா்ஸ் பேக்கா் கூறுகையில், இந்த சோகமான சம்பவத்தின் கொடூரமான தன்மையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உயிரிழந்த குழந்தையை நினைத்து வருந்துகிறோம். சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றாா். இந்த சம்பவம் தொடா்பாக குழந்தையின் தாய் மீது காவல்துறையினர் குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory