» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் குறுஞ்செய்தி சேவை ரத்து : மெட்டா நிறுவனம் அறிவிப்பு!

புதன் 6, டிசம்பர் 2023 5:10:47 PM (IST)

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்ய உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல சமூகவலைதள நிறுவனமான மெட்டா, கடந்த 2020-ம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமிலிருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர் (Messenger) செயலி மூலம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பையும் பெற்றது.  

இந்நிலையில், டிசம்பர் மாதத்தோடு குறுஞ்செய்தி சேவையை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம்அறிவித்துள்ளது. இனி, இந்த வசதி மூலம் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் செய்ய முடியாது எனினும், ஏற்கனவே இருக்கும் உரையாடல்களை படிக்க மட்டும் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. மெட்டா, தனது மெசஞ்சர் தளத்தை என்ட்-டூ-என்ட் (end-to-end encryption) முறைக்கு மாற்றவிருப்பதால் இந்த சேவையை நிறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory