» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளி : ஜி7 நாடுகளின் அறிக்கை!

புதன் 8, நவம்பர் 2023 5:10:21 PM (IST)"காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளியை ஆதரிக்கிறோம்" என்று ஜி7 நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தில் முன்னேறிய 7 நாடுகளும் கலந்து கொண்ட ஜி7 கூட்டம் ஜப்பானில் நடைபெற்றது. 2 நாள்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று (நவ.8) ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்.7 ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ஒரு மாத காலமாக காஸாவில் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளியை கோரியுள்ளன ஜி7 நாடுகள். 

ஆனால், போர் நிறுத்தம் என்பது குறித்து இந்நாடுகள் பேசவில்லை. அமெரிக்காவின் செயலர் ஆண்டனி பிளிங்கன் கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பின்போது, ஹமாஸை அக்.7 தாக்குதல் நடத்தும் பலத்தோடு விடுவது என்பது மீண்டும் மீண்டும் அதை நடக்க விடுவதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "உடனடியாக மக்களுக்குத் தேவைப்படும் வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும்  பிணைக் கைதிகளை விடுவிக்கப்படவும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் போர் இடைவெளியை ஆதரிக்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பையும் சர்வதேச சட்டங்களை குறிப்பாக சர்வதேச மனிதத்துவ சட்டத்தைக் கடைப்பிடிப்பதை நாங்கள் அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார் ஆண்டனி பிளிங்கன்.

நாடுகளின் அமைச்சர்கள் ஹமாஸின் தாக்குதலை கடுமையாக கண்டித்ததோடு காஸாவின் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கிடைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசியுள்ளனர். காஸாவில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 10,000-த்தைக் கடந்துள்ள நிலையில் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையையும் ஹமாஸை அழிக்கும் நோக்கத்தையும் ஆதரித்துள்ள அமெரிக்கா, மனிதத்துவ அடிப்படையில் போர் இடைவெளியைக் கோரி வருகிறது. அமெரிக்காவின் இந்த கோரிக்கையைத்தான் ஜி7 நாடுகள் முன்வைத்துள்ளன.   


மக்கள் கருத்து

இந்தியன்Nov 8, 2023 - 07:01:06 PM | Posted IP 162.1*****

ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்க துப்பில்லை இதுல வேற

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory