» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகே குண்டு வெடிப்பு; 58பேர் பலி; 130பேர் படுகாயம்

சனி 30, செப்டம்பர் 2023 4:47:46 PM (IST)



பாகிஸ்தானில் மசூதி அருகே தற்கொலை படை நடத்திய குண்டு வெடிப்பில் 58பேர் உயிழந்தனர். 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ளது பலுசிஸ்தான் பிராந்தியம். இதற்கு வடமேற்கே உள்ளது மஸ்டங் மாவட்டம். நேற்று இஸ்லாமியர்கள் மிலாது நபி கொண்டாடும் சமயத்தில் இங்குள்ள மதினா மசூதிக்கு அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர்; 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளது. 

இந்த குண்டு வெடிப்பில் அங்கு காவல்துறை பணியின் காரணமாக வந்திருந்த மஸ்டங் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் பலியானார். கஷ்கோரியின் காருக்கு அருகே அந்த தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றதாக நகர காவல்துறை அதிகாரி மொஹம்மத் ஜாவெத் லெஹ்ரி தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவரகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலுசிஸ்தான் மாநிலத்தின் இடைக்கால செய்தித்துறை அமைச்சர ஜன் அசக்சாய், "மத சகிப்புதன்மையையும் அமைதியையும் அன்னிய நாட்டு சக்திகளின் உதவியுடன் அழிக்க எதிரிகள் நினைக்கின்றனர். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார். இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory